Saturday, February 22, 2025

‘புஷ்பா 2’ பட இயக்குனர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2’. இப்படம் உலக அளவில் ரூ.1850 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து தற்போது ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் என்ன சிக்கியது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Latest news