Monday, March 31, 2025

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை செய்யலைன்னா சிக்கல் தான்! நோட் பண்ணுங்க!

தமிழக மக்களுக்கு ரேஷன் கார்டு என்பது மிக அத்தியாவசியமான ஆவணமாக இருப்பதால் இது பல வகைகளிலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என தங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் பெற்று வருகின்றனர். ஏழை, எளிய குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. விலைவாசி ஏற்றம் இருந்தாலும் குறைந்த விலையில் இது போன்ற மளிகை பொருட்கள் கிடைப்பது பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு நிதி சுமையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ரேஷன் கார்டு தொடர்பான சில புதிய விதிகள் அவ்வப்போது வெளியாகிவரும் அடிப்படியில் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசுதரப்பில் கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதோடு இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

ரேஷன் Card தவறாக பயன்படுத்தப்படுவது ரேஷன் பொருட்கள் தேவை இல்லாத பட்சத்திலும் பெற்று பிறரிடம் முறைகேடாக காசுக்கு விற்பனை செய்வது போன்றவற்றை சரிசெய்யும் நோக்கில் இந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அரசு பெற்று வருகிறது. அதோடு அரசாங்கம் தற்போது “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருவதால் தமிழகத்தில் உள்ள மக்கள் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

அது மட்டுமல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஆனால் அரசு தரப்பில் பல்வேறு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இவற்றுக்கு உட்படும் நபர்களுக்கு தான் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news