நாடு முழுவதும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு கொண்டே வருகிறது. விபத்துகளை தவிர்க்கவும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனாவசியமாக அபராதம் செலுத்துவதை தவிர்க்க எப்போதும் ஐந்து டாக்குமெண்ட் proofகளை வைத்திருப்பது அவசியம்.
வாகன இயக்கத்திற்கு முக்கியமாக தேவைப்படும் ஆவணம் driving license. இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி license இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஐந்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் என்பதை உறுதிப்படுத்தும் RC book இல்லாத பட்சத்தில் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், முதல் முறை விதி மீறலுக்கு 6 மாத சிறை தண்டனையும் தொடர்ச்சியான விதி மீறலுக்கு 2 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. வாகனத்திற்கு தேவையான காப்பீடு ஆவணம் இல்லையென்றால் ரெண்டாயிரம் முதல் நான்காயிரம் வரை அபராதம் வசூலிக்க நேரிடும்.
பயன்படுத்தும் வாகனம் வெளியிடும் மாசின் அளவை குறிக்கும் PUC சான்று இல்லாத வாகனங்களுக்கும் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கும் பத்தாயிரம் வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை கைவசம் இருப்பது, சாலையில் திடீரென ஏற்படும் சிக்கலான சூழல்களில் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பதால் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையிலாவது உடன் வைத்திருப்பதன் மூலம் வாகன விதி மீறல் பிரச்சினையை எளிதில் தவிர்ப்பது சாத்தியம் ஆகிறது.