தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. 5ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 28) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.
12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் தேர்வு எழுத தயாராக உள்ளனர். தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.