தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், பயிர்க்கடன்கள், உர மானியங்கள் உள்ளிட்ட அரசு உதவிகள் நேரடியாகவும் விரைவாகவும் கிடைப்பதை உறுதி செய்ய ‘விவசாய அடையாள எண்’ (Farmer ID) பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான அனைத்து நில விவரங்களையும் வேளாண் துறை தரவுத்தளத்தில் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகள் தங்களின் பகுதிக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது அரசு இ-சேவை மையங்களில் Farmer ID-க்கு பதிவு செய்யலாம்.

இதற்கு விவசாயி பெயரில் உள்ள அனைத்து பட்டா நகல்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவை தேவைப்படும்.

பல விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாக்களை வைத்திருந்தாலும், ஒரு பட்டாவை மட்டும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி Farmer ID-யில் பதிவு செய்யப்பட்ட நிலப்பரப்பின் அடிப்படையிலேயே பயிர்க்கடன், உர விநியோகம் மற்றும் மானியத் திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. எனவே விடுபட்ட நில விவரங்களையும் உடனடியாக இணைத்து புதுப்பிக்க வேண்டும்.

மேலும், ‘நம்ம வயல்’ என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலம் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி விவரங்களை மின்னணு பயிர் கணக்கீட்டில் தாங்களே பதிவு செய்யலாம்.

இதில் சர்வே எண், உட்பிரிவு எண்களையும் சரிபார்த்து, விடுபட்ட விவரங்களை கண்டறிந்து திருத்த முடியும். எனவே அனைத்து விவசாயிகளும் நில விவரங்களை முழுமையாக பதிவு செய்து அரசு நலத்திட்டங்களை தடையின்றி பெற வேண்டும்.

Related News

Latest News