குளிர்காலம் தொடங்கியதுமே சிலருக்கு பசியின்மையும், பலருக்கு அதிகப்படியான பசியும் ஏற்படுவது வழக்கம்.
பசி எடுக்கிறதே என நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் ஒரு கையளவு பாதாம், அதாவது 22 பாதாம் சாப்பிடுவதால் பல நன்மைகளை பெறலாம்.
புரதம், நார்ச்சத்து, கால்சியம், காப்பர், மெக்னீசியம், விட்டமின் E, Riboflavin, இரும்பு சத்து, பொட்டாசியம், சிங்க் ஆகிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பாதாமில் இதயத்திற்கு நன்மை தரும் unsaturated கொழுப்பு உள்ளது.
பாதாமை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் இதய நோய், type 2 வகை நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் 20 சதவீதமாக குறைவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இரத்தத்தில் உள்ள விட்டமின் E அளவை அதிகரிக்கும் பாதாம், cholesterol அளவுகளை குறைக்கிறது.
இரத்த சக்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளை சீரான முறையில் பராமரிப்பதில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக செயல்படும் பாதாமின் ருசியும் அபாரமாக இருக்கும் என்பதால் அனைவராலும் விரும்பபடக்கூடிய உணவாக பாதாம் அமைகிறது.
மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ பயன்களை பெற தினசரி பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக்க வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.