https://www.instagram.com/p/Cb3h1I2LGSW/?utm_source=ig_web_copy_link
விமானப் பயணத்தின்போது அருகிலுள்ள பயணி வேறொருவரின் நாயாக இருந்தால்,
எந்த SNACKSஐ ஒருவர் விரும்பித் தின்ன முடியும்?
அண்மையில் நிகழ்ந்தேறியுள்ள இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நீண்ட விமானப் பயணத்தின்போது சக பயணிகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமே என்று
அனைவருமே விரும்புகிறோம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்காக விரும்பும் சுற்றுலாத் தலங்களைத்
தேர்வுசெய்தாலும், விமான இருக்கையில் சக பயணியை நாம் தீர்மானிக்க முடியாது.
இருந்தாலும் விமானத்தில் பயணிக்கும் சிலர் இதுவரையில் இல்லாத அழகான சக பயணிகளைப்
பெறுவதன்மூலம் அதிர்ஷ்டசாலிகள் ஆகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ பலரின் இதயங்களை
வருடிவிட்டது. ஹாய், தயவுசெய்து உங்களின் சிற்றுண்டியை என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்பு
கிறீர்களா என்ற தலைப்பில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த ஒரு செல்லப்பிராணி, அதன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம்
தின்பண்டங்களைக் கேட்பதை அந்த வீடியோ காட்டுகிறது.
அந்த நாய்க்குட்டியின் குறும்புத்தனமான செயல்பாடுகள் என்னிடம் உள்ள அத்தனையையும் எடுத்துக்
கொள் என்று உங்களைச் சொல்ல வைப்பது உறுதி. சமூக ஊடகத்தில் வெளியாகி தற்போது அனைவரின்
கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது இந்த வீடியோ.