Monday, December 23, 2024

பணியின் போது மொபைல் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்..!!

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மொபைல் பயன்படுத்திக்கொண்டு பேருந்தை ஓட்டும் வீடியோக்கள் சமீப காலமாக இணையத்தில் பரவி வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

Latest news