ரூ.50 ஆயிரம் இருந்தால் போதும்., இந்த தொழில்களை செய்யலாம்..!

இன்று, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் வணிக வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. வெறும் ₹50,000 முதலீட்டுடன், உங்கள் சுய தொழிலை தொடங்கி, பிற்காலத்தில் பெரிய பிராண்டாக வளர்க்க முடியும்.

₹50,000 முதலீட்டுடன் பல லாபகரமான வணிகங்களை எளிதாக தொடங்க முடியும். இங்கு சில சிறந்த தொழில்களின் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

தேநீர் கடை

குறைந்த முதலீட்டில் தேநீர் அல்லது காபி கடை தொடங்குவது மிக சிறந்த வாய்ப்பு. ₹50,000 இல் சிறிய கடையை அமைத்து, தினசரி நல்ல வருமானம் பெறலாம்.

மெழுகுவர்த்தி

ஆன்மிகப் பூஜைகளுக்கு மிக முக்கியமானது மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி. இதன் விற்பனையில் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. குறைந்த முதலீட்டில், ஒரு சிறிய கைத்தொழிலாளியாக இந்த வணிகத்தை தொடங்கலாம். வீட்டிலிருந்தே இந்த வணிகத்தை நடத்தி, நேரடியான லாபத்தை குவிக்க முடியும்.

காகித பை தயாரிப்பு

பிளாஸ்டிக் பைகளைத் தடுக்கும் முயற்சிகள் காரணமாக, காகித பைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த வணிகத்தைத் தொடங்க மிகவும் எளிமையான இயந்திரங்களும், குறைந்த முதலீட்டும் போதுமானவை. குறைந்த பயிற்சி மற்றும் சிறிய முதலீட்டுடன், இந்தத் தொழிலில் வணிகத்தை தொடங்கி, அதிலிருந்து நல்ல லாபம் பெற முடியும்.

சிற்றுண்டி வணிகம்

சிறிய பேக்கரி அல்லது சிற்றுண்டி லாவ்பம் அதிகரிக்க ஒரு சிறந்த வாய்ப்பு. வீட்டிலிருந்து ஆரம்பித்து, சமூக ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து, வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும்.

மொபைல் ரிப்பேர் மற்றும் உபகரணங்கள்

பொதுவாக, மொபைல் போன்களின் பயன்பாடு எப்போதும் இருக்கும். மொபைல் ரிப்பேர் சேவை அதிகமாக தேவைப்படுகிறது. இந்தத் தொழிலுக்கு சிறிய பயிற்சியும், குறைந்த முதலீட்டும் போதுமானவை.

கைவினைப் பொருட்கள்

கைவினைப்பொருட்கள் அல்லது கைவினை நகைகள் தயாரிப்பில் பெரும் வாய்ப்பு உள்ளது. சிறிய படைப்பாற்றலை கொண்டு, ஆன்லைன் தளங்களில் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியும். வாடிக்கையாளர்கள் அதிகரித்தால், குழுவை அமைத்து வணிகத்தை விரிவுபடுத்தலாம்.

எச்சரிக்கை : இது வெறும் தகவல் மட்டுமே. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Related News

Latest News