Monday, December 22, 2025

‘தைரியம் இருந்தா விஜய் மேல கை வைங்க பாப்போம்’ : தூண்டிவிட்ட ஆதவ் அர்ஜுனா

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :

கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் 9 மணி நேரம் அழுதார். மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது. தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா?

தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டிற்கு செல்லுங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related News

Latest News