294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.
தேர்தலை முன்னிட்டு கொல்கத்தா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவல்களை அனுமதிக்கமாட்டோம். அத்தகையவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாது. மாநில மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படுவோம். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
