Monday, February 23, 2026

ஓ.பி.எஸ் திமுகவுக்கு சென்றால் நாங்கள் அணியை விட்டு வெளியேறுவோம் – ஆதரவாளர்கள் போர்க்கொடி

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்றால் அவருடன் நிர்வாகிகள் நாங்கள் யாரும் செல்லமாட்டோம். ஓ.பி.எஸ்., தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நாங்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அணியை விட்டு வெளியேறுவோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக நீலகிரியை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறியதாவது:-

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது எங்களிடம் ஒரு படிவம் வழங்கப்பட்டு, அதில் தி.மு.க.விற்கு செல்வதா? அல்லது வேறு கட்சிக்கு செல்வதா? என 2 விருப்பங்கள் கேட்கப்பட்டன.

அப்போதே நாங்கள் தி.மு.க. என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டோம். மேலும் 88 மாவட்ட செயலாளர்களில் 11 பேர் மட்டுமே தி.மு.க.வுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த நாங்கள் விஜயின் த.வெ.கவுக்கு செல்வதை தவி வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related News

Latest News

error: Content is protected !!