Thursday, May 29, 2025

“இது மட்டும்” நடந்தால் யாருமே தங்கம் வாங்க மாட்டார்கள்! அதிர்ச்சி கொடுக்கும் ஆனந்த் சீனிவாசன்!

“கையில கொஞ்சம் தங்கம் இருந்தா எதுக்குமே யூஸ் ஆகும்” என்று கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வாங்கி வைப்பவர்களே அதிகம். ஆனாலும் மக்களை தங்கம் ஏன் இப்படி தன் பக்கம் இழுக்கிறது? என்ன நடந்தால் இப்படி தங்கம் வாங்கப்படுவது குறையும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய Points-ஐ கூறியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன் தனது YouTube பக்கத்தில் “நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.. அரசுக்கு எப்போதும் தங்கத்தைப் பிடிக்கவே பிடிக்காது… இந்த அரசு என்றில்லை… எந்தவொரு அரசுக்கும் தங்கத்தைப் பிடிக்காது. ஏனெனில் நீங்கள் பங்குகளை வைத்திருந்தாலோ அல்லது கடன் பத்திரங்கள் வைத்திருந்தாலோ அல்லது Fixed டெபாசிட்டாக இருந்தாலும் கூட பணம் நமது பொருளாதாரத்திற்குள் ரொடெஷனில், சர்குலேஷனில் இருக்கிறது என அர்த்தம். ஆனால் நீங்கள் தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ மாற்றினால் அது சர்குலேஷனில் இருந்து வெளியே போய் நான்- புரோடக்டிவ் சொத்துக்களாக மாறிவிடுகிறது. எனவே, சர்குலேஷனில் இருக்கும் பணம் நான்- புரோடக்டிவ் சொத்துக்களாக மாறுவதை எந்தவொரு அரசாக இருந்தாலும் அதை தடுக்கவே முயற்சி செய்யும்.

வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டுமே தங்கம் வாங்குவது குறையும். Fixed டெபாசிட்டிலேயே நல்ல வட்டி கிடைக்கும் என்றால் யாருமே தங்கத்தை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். ரூபாய் மதிப்பை உயர்த்தி, மக்கள் தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றால் வட்டி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் பணவீக்கம் சரியும்.. ஆனால், பொருளாதாரம் படாத பாடுபடும்” என்று கூறியுள்ளார். இது ஒரு செய்தி மட்டுமே. இதனை பொதுமக்கள் தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news