Tuesday, January 27, 2026

‘எனக்கு விருது கிடைத்தால் அதை குப்பைத் தொட்டியில் போடுவேன்’ – நடிகர் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விருதுகளெல்லாம் பைத்தியக்காரத்தனம். 4 பேர் உட்கார்ந்து கொண்டு 7 கோடி மக்களுக்கு பிடித்த விஷயங்கள் சொல்வதற்கு அவர்கள் என்ன மேதாவிகளா?

எனக்கு விருதுகள் கொடுத்தால், போகிற வழியில் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன். ஒருவேளை அந்த விருதில் தங்கம் இருந்தால், அதை அடகு வைத்து அன்னதானம் செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related News

Latest News