தமிழ்நாடு முழுவதும் பொதுஇடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றவேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
சாலைகளில் இருக்கும் கொடிக்கம்பங்கள் இடையூறு என்றால், சாலையில் இருக்கும் சிலைகளும் இடையூறுதானே? அதை ஏன் அகற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.