திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, அது குறித்து விளக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :
புதிய கல்விக் கொள்கையில், மூன்றாவதாக கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மாற்றி, ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும், என்று கொண்டு வந்தவர் மோடி. திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மூன்றாவது மொழி ஹிந்தியாகத் தான் இருந்தது.
மார்ச் 5ல் தேசிய கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. கடந்த 18 நாட்களில், 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். 90 நாட்களில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்குடன் இயக்கம் துவங்கப்பட்டது. இதே வேகத்தில் சென்றால் இரண்டு கோடி கையெழுத்தை எட்டி இருப்போம்.
பாஜக ஆட்சிக்கு வந்தார் தனியார் பள்ளிகளுக்கு அனுமதியே கொடுக்கப்பட மாட்டாது. அரசு பள்ளிகளை மேம்படுத்தி, பி.எம்., ஸ்ரீ பள்ளிகளாக மாற்றப்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.