இட்லி ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையா?

102
Advertisement

https://www.instagram.com/reel/CcXibajpXbb/?utm_source=ig_web_copy_link

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. விதம்விதமான ஐஸ்கிரீம்கள்
கோடைக்கு இதமாக வந்துவிட்டன. ஆனால், புதுவிதமாக வந்துள்ள
இட்லி ஐஸ்கிரீம் வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே மேகி ஐஸ்கிரீம்முதல் தோசை ஐஸ்கிரீம் வரைப்
பிரபலமான சூழ்நிலையில் உணவுப் பிரியர்களைக் கவர்ந்தது.
தற்போது புதுவரவாக இட்லி ஐஸ்கிரீம் வந்துள்ளது.

Advertisement

டெல்லியில் உள்ள லஜ்பத் நகரில் தெருவோர உணவகம் ஒன்றில்
இந்த இட்லி ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இட்லி ஐஸ்கிரீம் மற்றொரு ஆற்றல்மிக்க உலகத்தை
அறிமுகப்படுத்தும் நேரம் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில்
பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் இட்லி ஐஸ்கிரீம் தயார்செய்யப்படும்
காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம் இட்லி ஐஸ்கிரீம் ஒரு விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.