முன்பெல்லாம் வீடுகளில் தினமும் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி, தோசை செய்வது சாதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது கிரைண்டர், மிக்ஸி போன்ற சாதனைகள் வந்ததும், ஒருமுறை மாவு அரைத்துவிட்டு அதை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துகிறோம்.
இப்படி பயன்படுத்துவதால் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேத வல்லுநரும் ஊட்டச்சத்து நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
என்னென்ன பிரச்சனைகள் வரும்?
மாவு புளிக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. அரைத்த மாவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் வைக்கும்போது, பாக்டீரியாக்கள் பெருகி நச்சுக்களை உருவாக்குகின்றன. மேலும், ஒரே பாத்திரத்தில் மாவை வைத்திருக்கும்போது இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இட்லி, தோசை மாவில் வெந்தயம் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு புளித்த மாவு உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதய நோயாளிகளுக்கு இதுவும் கடுமையான விளைவுகளை தரும்.
பழைய மாவு ஜீரணிக்க கடினமாகும். இதனால் வாய்வு மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். புதிய மாவு நல்ல செரிமானத்திற்கு உதவும்.
ஃப்ரிட்ஜில் நீண்டகாலம் வைக்கப்படும் மாவு அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கிறது. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
மாவைப் பாதுகாக்கும் வழிகள்
மாவை ஒரே பாத்திரத்தில் வைக்காமல், சிறிய அளவிலான இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களில் பிரித்து வைக்கவும். இது பாக்டீரியா வளர்ச்சியை ஓரளவு குறைக்கும். இட்லி, தோசை மாவை மூன்று நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.