Thursday, October 2, 2025

ICC வெளியிட்டுள்ள ஷ்ரேயா கோஷலின் புதுப்பாடல்!!

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்களுக்கான பரிசுத் தொகையை ICC ஆண்கள் அணிக்கு நிகராக உயர்த்தியது. பெண்களுக்கான 50 ஓவர் ICC உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது.

பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டிகள் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.இதற்கிடையே, தற்போது ICC உலக கோப்பைக்கான Anthem-ஐ ICC வெளியிட்டுள்ளது.இந்த பாடல், இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.இப்பாடலுக்கான வீடியோவை ICC வெளியிட்டுள்ளது.

மேலும், தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய பெண்கள் அணி இதுவரை ICC கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து.இந்த நிலையில், ICC இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News