உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக 8 அணிகள் பங்கேற்கும் புதிய தொடரை ICC அறிமுகம் செய்துள்ளது.
மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி தொடருக்கான கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகம் செய்தது. இந்த தொடர் வருகிற 20-ந் தேதி பாங்காக்கில் தொடங்குகிறது.
இந்த தொடரில் தாய்லாந்து, நெதர்லாந்து, PNG, ஐக்கிய அரபு, ஸ்காட்லாந்து, நமிபியா, தன்சானியா, உகாண்டா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
