Saturday, December 27, 2025

சென்னையில் எஸ்​ஐஆர் பணி​களை கண்​காணிக்க ஐஏஎஸ் அதி​காரி​கள் நியமனம்

சென்னையில் எஸ்​ஐஆர் பணி​களை கண்​காணிக்க 8 ஐஏஎஸ் அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்பில், சென்னை மாவட்​டத்​தில் 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களிலும், 3 ஆயிரத்து 718 வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மூலம் வீடு வீடாக எஸ்​ஐஆர் படிவம் வழங்​கும் பணி நடை​பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களுக்கு ஒரு மேற்​பார்​வை​யாளர் என ஆயிரத்து 859 வாக்​குச்​சாவடி நிலை மேற்​பார்​வை​யாளர்​கள் இப்​பணி​களை கண்​காணித்து வரு​கின்​றனர் என்றும், படிவங்​களைப் பூர்த்தி செய்ய வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் உதவு​வார்​கள் என்றும், வீடு​கள் பூட்​டி​யிருந்​தா​லும், அலு​வலர்​கள் 3 முறை வந்​து, படிவங்​களைக் கொடுத்​து, பூர்த்தி செய்​யப்​பட்ட படிவங்​களை பெற்​றுக்​கொள்​வார்​கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்​டத்​தில் 16 தொகு​தி​களுக்​கும் கண்​காணிப்பு அலு​வலர்​களாக கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள் 8 பேர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர் என்றும், 16 தொகு​தி​களும் இடம்​பெற்​றுள்ள மாநக​ராட்சி மண்டல அலு​வல​கத்​தில் வாக்​காளர் உதவி மைய​மும் இயங்கி வரு​கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News