பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 2026 வரை தலைவராக அன்புமணியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து விளக்கம் தர அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு பதில் அளிக்கவில்லை. மேலும் இதற்கு வழங்கப்பட்ட கெடுவும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இதையடுத்து அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10 ஆம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டி அளித்தார். இந்நிலையில் ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளர்.