Monday, January 26, 2026

20 ஆம் தேதி நாள் முழுவதும் மௌன விரதம் : பிரஷாந்த் கிஷோர் பேட்டி

நடந்து முடிந்த பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இந்த தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போவதாகக் கருதப்பட்டார். ஆனால் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜான் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மாறாக வெறும் 4 தொகுதிகளைத் தவிர்த்த பிற அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரசாந்த் கிஷோர், பொதுமக்கள் எங்களை நம்பவில்லை என்றால், முழுப் பொறுப்பும் என் மீதுதான், நான் எங்கோ தவறு செய்திருக்க வேண்டும்.

அதிகாரத்தில் மாற்றத்தைக் கூட கொண்டு வர முடியவில்லை. அதனால்தான் நவம்பர் 20 ஆம் தேதி காந்தி பிடிஹர்வா ஆசிரமத்தில் 24 மணி நேர மௌன அஞ்சலி செலுத்துவேன்.

நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என தவறாக நினைக்கிறார்கள். நான் பீகாரை விட்டு வெளியேற மாட்டேன்.

பீகாரில் அரசாங்கம் ஒரு தேர்தலில் கிட்டத்தட்ட ₹40,000 கோடி பொதுப் பணத்தைச் செலவிடுவதாக உறுதியளித்திருப்பது இதுவே முதல் முறை. மேலும் NDA இவ்வளவு பெரிய பெரும்பான்மையைப் பெற்றதற்கு இதுவே ஒரு காரணம் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Latest News