கூட்டணி வைத்து விஜயகாந்த் செய்த தவறை தான் செய்ய மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்று காட்டுவேன் என்றும் அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும் அவ்வளவு தான் எனவும் தெரிவித்தார்.
கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு என்று கூறிய சீமான், அதனால் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் யாருடனும் கூட்டணி வைக்காது எனவும் தெரிவித்தார். நாங்கள் மாற்றத்திற்கான அரசியலை செய்ய விரும்புகிறோம் என்று கூறிய சீமான், ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றத்தை எப்படி கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
