Monday, January 12, 2026

‘நான் மும்பைக்கு வருவேன், என் காலை வெட்டிப் பாருங்கள்’ – அண்ணாமலை ஆவேச பேச்சு

மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, “மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்” என்று பேசினார்.

இதையடுத்து, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து வந்த உனங்களுக்கும், இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் மும்பையைப் பற்றி பேசுகிறார். அதனால்தான் உங்களை எல்லாம் பால் தாக்கரே மகாராஷ்டிரத்திலிருந்து விரட்டி அடித்தார். வட இந்தியர்களுக்கு எதிராக இதுவரை அவதூறாகப் பேசிவிட்டு இப்போது இப்படி பேசுவதா? என்று ஆவேசமாகக் கூறினார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது : “ஆதித்ய தாக்கரே ராஜ் தாக்கரே எல்லாம் யார்? அங்கிருந்து என்னை மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். நான் விவசாயியின் மகன் பெருமைப்படுகிறேன். தாக்கரே மேடை போட்டு என்னை திட்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நான் உயர்ந்து விட்டேனா என தெரியவில்லை.

மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவேன் என எழுதி இருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன், என் காலை வெட்டிப் பாருங்கள். இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயந்து இருந்தால் நான் என் ஊரில் தான் இருந்திருக்க வேண்டும்

காமராஜரை இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று சொன்னால் அவர் தமிழர் இல்லை என்று ஆகிவிடுமா? மும்பை உலகத்தின் தலைநகரம் என சொல்வது மராட்டியர்களால் கட்டிய நகரம் என்று ஆகிவிடுமா?

மும்பை மராட்டிய சகோதர சகோதரிகளால் உயர்ந்த நகரம் என்று இல்லை என ஆகிவிடுமா? இது அந்த நகரம் குறித்து சொல்லக்கூடிய பெருமை, அடையாளம்.

என்னை அவமானப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. திமுக அதைத்தான் காலம் காலமாக செய்கிறார்கள். காலை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என கூறுவதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை என அவர் கூறினார்.

Related News

Latest News