ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி. அந்த போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.
ஜூலி, சமீப காலமாக தவெக கட்சி தலைவர் மற்றும் நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்று சொல்லுங்கள். அந்த தொகுதியில் நான் நேரடியாக வந்து உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். உங்கள் கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்கிற விஷயங்களை எல்லாம் மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவேன்” என்று சவால் விடும் வகையில் ஜூலி பேசியுள்ளார்.
