Friday, December 26, 2025

“என் மூச்சு இருக்கும் வரை நானே பாமகவின் தலைவர்” – ராமதாஸ் உறுதி

பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் நீடித்து வருகிறது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அன்புமணியுடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது.

கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். 2026 தேர்தல் வரை நானே பாமக தலைவராக நீடிப்பேன். பிறகு வேண்டுமானால் அவர் (அன்புமணி) இருக்கட்டும். இதுதான் என் முடிவு என கூறினார்.

இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது : அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு தலைவர் பதவியே கொடுக்கமாட்டேன். என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவின் தலைவர் என கூறியுள்ளார்.

Related News

Latest News