Wednesday, February 25, 2026

புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக 10 நாளில் அறிவிப்பேன் : பவர் ஸ்டார் சீனிவாசன்

சென்னை போரூரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், புதிய கட்சி தொடங்குவது தொடர்பாகவும் இன்னும் பத்து நாளில் அறிவிப்பேன்.

தற்போது நடந்து கொண்டிருப்பதே நல்லாட்சி தான். இதே ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். கண்டிப்பாக தற்போது உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் தொடர்வார்.

நடிகர் என்ற முறையில் விஜயுடன் அண்ணன் தம்பியாக இருப்போம். ஆனால் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கப் போவது திமுக மட்டும் தான். நல்லாட்சி நடக்கும். திமுக மீது அவதூறு பரப்புவதற்காக போதை பொருட்கள் அதிகம் விற்கப்படுவதாக பழி சுமத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Related News

Latest News