Tuesday, March 11, 2025

“நான் மாஃபா பாண்டியராஜனை பற்றி பேசவே இல்லை” – கே.டி. ராஜேந்திர பாலாஜி

சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். இதையடுத்து மேடையில் பேசிய அவர் மாஃபா பாண்டியராஜன் குறித்து ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாஃபா பாண்டியராஜன் குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் “நான் அவரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பொதுவான சில பிரச்சனைகள் பற்றி தான் பேசினேன். முடிந்து போன பிரச்சனைகளை பற்றி பேச வேண்டாம்.” என பதில் கூறினார்.

Latest news