Friday, July 4, 2025

“கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது” : பாமக எம்.எல்.ஏ அருள்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே நிலவி வரும் கருத்து மோதலில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திண்டாடி வருகின்றனர்.

ராமதாசுக்கு பக்கபலமாக இருந்த எம்.எல்.ஏ. அருளை, நேற்று முன்தினம் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்றும், ராமதாஸ் மட்டுமே பாமகவின் தலைவர் என்றும் எம்.எல்.ஏ அருள் தெரிவித்தார்.

இந்நிலையில் பாமக கொறடா பொறுப்பில் இருந்தும் எம்.எல்.ஏ அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். இதையடுத்து ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news