Wednesday, July 30, 2025

“முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் நிறுவரான எனக்கே உண்டு” – ராமதாஸ் பேட்டி

பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

பா.ம.க. இணை பொதுச்செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆகஸ்டு 10-ந் தேதி பூம்புகாரில் பா.ம.க. மகளிர் மாநாடு நடக்கிறது. அதை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்துள்ளோம். தற்போது வரை பா.ம.க. எந்த கூட்டணியில் போட்டியிடும் என்பதை முடிவு செய்யவில்லை. என்னுடன் இருக்கும் நிர்வாகிகள் தான் பா.ம.க. சார்பில் தேர்தலில் நிற்பார்கள்.

பா.ம.க.வில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் நிறுவனரான எனக்கே உண்டு. பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News