விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சீமான், “தணிக்கை துறை விருப்பு வெறுப்புக்கு ஏற்றமாதிரி செயல்படுகிறது. நான் நடித்த அடங்காதே படத்தில் நான் பேசிய வசனங்களை நீக்கி விட்டார்கள். அந்த படத்தில் 500 இடங்களுக்கு மேல் வெட்டி விட்டார்கள். திரையில வர்ற ஜனநாயகன் பத்தி பேசிட்டு இருக்கீங்க’.. தரையில நான் ஒரு ஜனநாயகன் இருக்கேன். என்ன கண்டுக்க மாட்ரீங்க” என கூறியுள்ளார்.
