குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர் : இதில் உள்ள அம்சங்கள் என்ன?

Hyundai Motor India நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட Hyundai Exter மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காம்பேக்ட் SUV ரூ. 5.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கான முன்பதிவு ரூ. 11,000 கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்டர் மாடலில் வெளிப்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பம்ப்பர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய வடிவமைப்பில் கிரில், 15 இன்ச் டயமன்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் விங்-டைப் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் கோல்டன் பிரான்ஸ் மற்றும் டைட்டானியம் பிளாக் மேட் நிறங்களில் கிடைக்கிறது.

காரின் உள்ளக வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கேபின் பகுதி டூயல்-டோன் நேவி மற்றும் கிரே தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3D கார்பன் பேட்டன் ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு, புதிய ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், மெட்டல் பெடல்கள், மடிக்கக்கூடிய டிரைவர் ஆர்ம்-ரெஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட சீட் கவர்கள் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த மாடலில் டேஷ்கேம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, டைப்-C ரியர் USB போர்ட் மற்றும் கனெக்ட்டெட் கார்சேவை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் OTA (Over-the-Air) அப்டேட்கள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

என்ஜின் மற்றும் செயல்திறன் பகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மேலும், CNG விருப்பத்திலும் இந்த கார் கிடைக்கிறது. இதில் இரட்டை சிலிண்டர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related News

Latest News