Thursday, January 15, 2026

மனைவியை வீட்டின் மாடியிலிருந்து தூக்கி வீசிய கணவன்.,என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவன் வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜான்சியில் ராணிப்பூர் பகுதியை சேர்ந்த 26 வயது தீஜா, 2022 இல் முகேஷ் அஹிர்வாரை திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு ஆரம்பத்தில் சரியான வாழ்க்கை இருந்தாலும், பிறகு முகேஷின் நடத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாறி உள்ளது. பல நேரங்களில் தீஜாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

நேற்று முன்தினம், முகேஷ் வீட்டிற்கு வந்து தீஜாவை தாக்கி கடுமையாக கட்டாய உடலுறவு செய்தார். அதற்கு தீஜா மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த முகேஷ், இருமாடி கட்டிடத்தில் இருந்து தீஜாவை தூக்கிச் கீழே வீசினார். அதன் பின் தீஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கவாசிகள் அவளை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது, அவர் மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது. இதையடுத்து தீஜா, கணவருக்கு எதிராக அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News