புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏனாம் பிராந்தியத்தின் பல்லாரி வீதியை சேர்ந்தவர் பொம்மாடி நானி (26) பெயிண்ட் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொம்மாடி தினா (24). இருவரும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் இன்று காலை தினா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.மனைவியை கொலை செய்து விட்டு நானி காரில் தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ஏனாம் காவல் கண்காணிப்பாளர் வரதராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய கணவர் நானியை தேடி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதன் உச்ச கட்டத்தில் தான் அவர் மனைவியை வெட்டிக்கொன்று இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. கணவரை பிடித்து விசாரணை செய்தல் மட்டுமே என காரணம் என்று தெரிய வரும்!!
