Monday, December 1, 2025

ரத்த வெள்ளத்தில் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன் – கொலையா? தற்கொலையா?

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை.

மதுரை நாகமலை புதுக்கோட்டை சர்வோதயா நகரில் பூட்டி இருந்த வீட்டில் ரத்த வெள்ளத்தில் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கணவரும் இறந்த சம்பவம் நாகமலை புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தூக்கில் தொங்கினாரா அல்லது இருவரையும் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் நாகமலை கோட்டை போலீஸார் விசாரணை

மதுரை நாகமலை புதுக்கோட்டை சர்வோதயா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 73). இவரது மனைவி யோகாம்பிகை (வயது 68) மற்றும் இவரது மகன் சசிகுமார் (வயது 32) ஆகியோருடன் வசித்து வந்தனர்.

இவர்களது மகள் மணிமேகலை திருமணம் முடித்து அருகிலேயே வசித்து வருகிறார். இன்று காலை மணிமேகலை தனது குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவைத் தட்டியும் திறக்காத நிலையில் ஜன்னலில் இருந்து பார்த்த போது கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதனையடுத்து அருகில் உள்ளவர்களை அழைத்து வீட்டில் சென்று பார்த்த போது கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் உள் அறையில் யோகாம்பிகை தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தடை அறிவியல் துறை மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது சென்று திரும்பி வந்தது.

ஒரே நேரத்தில் மனைவி இரத்த வெள்ளத்திலும் கணவர் தூக்கி தூங்கி நிலையிலும் உள்ளதால் கணவர் மனைவியை கொலை செய்து பின் தூக்கில் தொங்கினார் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News