Wednesday, December 24, 2025

மனைவியை வைத்து சூதாடிய கணவன் : அடுத்து நிகழ்ந்த கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மனதை பதற வைக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சம் கண்டுள்ளது. டேனிஷ் என்ற இளைஞர் தனது குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தின் காரணமாக, தனது சொந்த மனைவியையே பணமாக வைத்து சூதாடியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீரட்டை சேர்ந்த டேனிஷ், பாக்தாத் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். மது பழக்கத்திற்கு அடிமையான டேனிஷ் சூதாட்டத்தில் நேரம் கழிப்பது வழக்கம். சூதாட்டத்தில் பணமும், வீட்டு பொருட்களும் பலமுறை இழந்ததால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் டேனிஷ், சூதாடுவதற்கு பணம் இல்லாததால் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை வைத்துக் கொண்டு சூதாட முடிவு செய்தார். இதில் அவர் தோற்றுப்போயுள்ளார்.

சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News