சீனாவின் ஹாங்ஷோ நகரில் உள்ள ஒரு லைவ் ஸ்ட்ரீமிங் ஈ-காமர்ஸ் நிறுவன HR மேற்பார்வையாளர், காய்ச்சலால் ஒருமணி நேர சிகிச்சை விடுப்பு கேட்ட பெண் ஊழியரிடம் அருவருப்பான வார்த்தைகளால் திட்டியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த நிறுவனத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண் ஊழியர் விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு அந்த HR தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். நீங்க ரொம்ப பலவீனமா இருக்கீங்க. 38 டிகிரிக்கு கூட தாங்க முடியலையா?”
“உங்க மூளை காய்ச்சலால் சுருங்கி விட்டதா? என கடுமையாக பேசியுள்ளார்.
இந்த ஆடியோ இணையத்தில் பரவியதை அடுத்து HR ஹுவாங் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.