இன்றைய காலத்தில், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், வாகன உரிமையாளர்களுக்கு மாதாந்திர செலவுகள் அதிகரித்து, குடும்ப பட்ஜெட்டில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே உங்கள் வாகனத்தில் பெட்ரோலை மிச்சப்படுத்துவது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.
வாகனத்தின் எஞ்சினை அவ்வப்போது சரிபார்க்கவும். எஞ்சின் எண்ணெய் (engine oil) மற்றும் காற்று வடிகட்டி (air filter) ஆகியவற்றை சரியான இடைவெளியில் மாற்றவேண்டும். இதனால் எஞ்சினின் செயல்திறன் அதிகரிக்கும். பெட்ரோல் செலவு குறையும்.
டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரிக்கவும். குறைவான காற்றழுத்தம் இருந்தால், வாகனம் அதிக பெட்ரோலை எரிக்கும். மாதம் ஒரு முறையாவது டயர் அழுத்தத்தை சரிபார்க்கவும்.
வாகனத்தில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் எரிபொருள் செலவை அதிகரிக்கும். எனவே வாகனத்தில் உள்ள தேவையில்லாத பொருட்களை அகற்றி விடுங்கள்.
அதிவேகமாக ஓட்டுவதையும் திடீரென பிரேக் பிடிப்பதையும் தவிர்க்கவும். அதிக வேகத்தில் ஓட்டுவது பெட்ரோல் செலவை அதிகரிக்கும். மணிக்கு 50 அல்லது 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுவது நல்லது.
காலை நேரங்களில் பெட்ரோல் நிரப்புவது சிறந்தது, ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலையில் பெட்ரோல் அடர்த்தியாக இருக்கும்.முழு டேங்க் நிரப்புவதற்கு பதிலாக, தேவையான அளவு பெட்ரோலை மட்டும் நிரப்பவும். இது வாகனத்தின் எடையைக் குறைத்து எரிபொருள் சேமிப்புக்கு உதவும்.