Saturday, May 24, 2025

போலியான தங்கத்தை கண்டுபிடிக்க ஈஸியான டிப்ஸ் இதோ..!!

தங்கத்திற்கு அதிக டிமாண்ட் இருப்பதன் காரணமாக தூய்மையற்ற அல்லது போலியான தங்கம் ஓரிரு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே வாங்கும் தங்கம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதற்கான வழிகள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.

BIS ஹால்மார்க் முத்திரை

நீங்கள் வாங்கும் தங்கத்தில் BIS ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை கவனிக்கவும். BIS ஹால்மார்க் முத்திரை இருப்பது தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கப் பொருளிலும் ஹால்மார்க் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (HUID) இருக்கும்.

BIS Care அப்ளிகேஷனை பயன்படுத்தவும்

உங்களுடைய ஆப் ஸ்டோரில் இருந்து BIS Care அப்ளிகேஷனை Install செய்துகொள்ளுங்கள். நகை கடையின் ஹால்மார்க் ஸ்டேட்டஸ் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்துவதற்கு HUID நம்பரை என்டர் செய்யுங்கள். நீங்கள் வாங்கிய பொருள் அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காந்த சோதனை முயற்சி

ஒருவேளை நீங்கள் வாங்கிய பொருள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டால் அதில் பிற உலோகங்கள் கலக்கப்பட்டு இருக்கலாம் அல்லது போலியானதாக இருக்கலாம். உண்மையான தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படாது.

ரசீது பெற்றுக் கொள்ள மறக்காதீர்கள்

நீங்கள் வாங்கிய தங்கத்திற்கு ரசீது பெற்றுக் கொள்ள மறக்காதீர்கள். அந்த ரசீதில் தங்கத்தின் எடை, அதன் தூய்மை, செய்கூலி மற்றும் ஹால்மார்க் போன்ற விவரங்கள் அடங்கி இருக்க வேண்டும். சரியான ரசீது இருந்தால் காப்பீடு மற்றும் தங்கத்தை நீங்கள் மீண்டும் விற்பனை செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news