பிரேசில் நாட்டை பூர்வீகமாக கொண்ட அன்னாசி பழம் தென் அமெரிக்காவிற்கு சென்ற பின் ஐரோப்பா முழுவதும் பரவியது. மேலும் மலச்சிக்கல், சிறுநீர் பாதை தொற்று, காய்ச்சல், மாதவிடாய் வலி, தீராத தாகம், அடி வயிற்று வலி, குடல் புழுக்கள் மற்றும் மஞ்சள் காமாலைக்கும் அன்னாசிப்பழம் தீர்வாக அமைகிறது.
இது மட்டுமில்லாமல் செரிமான சிக்கல்கள், நீரிழிவு நோய், கொலெஸ்டெரால் மற்றும் இதய நோய் இருப்பவர்களும் சாப்பிட வேண்டிய பழங்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது அன்னாசிப்பழம்.
விட்டமின் C நிறைந்துள்ள அன்னாசிப்பழத்தில் இருக்கும் கொலாஜன் சிறப்பான சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. விட்டமின்ஸ், minerals, anti oxidants, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ள அன்னாசிப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் acidity அதிகமாகும் என்பதால் அவ்வாறு சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அன்னாசி பழத்தின் முழுமையான பலன்களை பெற காலை 11 மணிக்கும் 12 மணிக்கும் இடையே அல்லது மாலை நேரத்தில் சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.