இந்த நவயுக காலத்தில் 25 வயது இளைஞர்களையும் அச்சுறுத்தும் நோயாக உருவெடுத்துள்ளது மாரடைப்பு.
பெரும்பாலும் இரத்த நாளங்களில் தேங்கும் கொழுப்பு சத்தால் ஏற்படும் மாரடைப்பை தடுக்க பரிந்துரைக்கபடும் நூற்றக்கணக்கான உணவுகளில் ஒன்று தான் முட்டை.
ஒரு வாரத்திற்கு நான்கு முதல் ஏழு முட்டைகளை உண்பவர்களுக்கு இதய நோய் அபாயம் 75 சதவிகிதம் வரை குறைவதாக 10 வருட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.ஆனால் இதை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.
முட்டையின் மஞ்சள் பகுதியை எடுத்து விட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவது இதயத்திற்கு நன்மை தரும்.முட்டையின் வெள்ளைக்கரு உடலில் கரோட்டினாய்டு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற உயிரியல் கலவைகளை அதிகரித்து தமனிகளில் கொழுப்பு குவிவதை தடுக்கிறது. உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெற்றுள்ள முட்டையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.