Thursday, March 20, 2025

பயமுறுத்தும் டிஜிட்டல் கைது : எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

டிஜிட்டல் கைது என்பது ஒரு வகையான ஆள்மாறாட்ட மோசடியாகும். மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி சேனல்கள் மூலம் இந்த மோசடி நடக்கிறது. சட்ட அமலாக்க அல்லது சட்ட அதிகாரிகளைப் போல நடிப்பார்கள்.

ஆன்லைன் குற்றங்கள் அல்லது சைபர் குற்றங்களுக்காக பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் உடனடி பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கோருவார்கள், நீங்கள் இணங்கவில்லை என்றால் கைது செய்வதாக அச்சுறுத்துவார்கள்.

Also Read : பணம் பறிக்க புது ட்ரிக்…இந்த நம்பரிலிருந்து போன் வந்தால் உஷாரா இருங்க

முதலில் நீங்கள் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள். அதில் போலியான அரசாங்க முத்திரைகள் அல்லது லோகோக்கள் இருக்கலாம்.

எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

உங்களை ‘டிஜிட்டல் கைது’ செய்வதாகச் சொன்னால் பதற்றமடையாதீர்கள். அழைப்பிலிருந்து வெளியேறிவிடுங்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைபேசி வழியாக OTP நம்பரை எவருடனும் பகிர வேண்டாம்.

வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்புகொண்டால் பொருட்படுத்தாதீர்கள். வீடியோ அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்.

நீங்கள் ஏதேனும் மோசடிக்கு பலியாகிவிட்டதாகவோ அல்லது மோசடியில் சிக்கியிருப்பதாகவோ நினைத்தால், உடனடியாக உள்ளூர் சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும்.

சட்ட அமலாக்க நிறுவனங்கள் அல்லது அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அல்லது கூறிக்கொள்ளும் நபர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கவும்.

இதுபோன்ற சம்பவங்களைப் புகாரளிக்க விரும்பினால் நீங்கள் 1930 என்ற உதவி எண்ணுக்குப் புகாரளிக்க வேண்டும்.

Latest news