சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோட கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, ‘கூல் கேப்டன்’ மாதிரி ‘விவசாயி’ன்னும் ஒரு பட்டப்பெயர் இருக்கு. IPL டைம்ல மட்டும் கிரிக்கெட் ஆடிட்டு, மத்த நேரங்கள்ல விவசாயம் செய்றதால ரசிகர்கள் இந்த பேரை அவருக்கு வச்சுருக்காங்க.
கிரிக்கெட் மற்றும் விளம்பரங்கள்ல இருந்து, கோடிக்கணக்குல வருமானம் கொட்டுனாலும் பண்ணை மூலமாவும் தோனி எக்கச்சக்க லாபம் பாக்குறாரு. தோனி அவரோட பண்ணைய எப்படி நிர்வாகம் செய்றாரு? அதுல விளையுற பொருட்களை எப்படி விற்பனை செய்றாருன்னு இங்க பாக்கலாம்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சில தான் தோனியோட விவசாய பண்ணை அமைஞ்சிருக்கு. பேரு கைலாசபதி. இங்க முழுக்கவே இயற்கை முறை விவசாயம் தான். உரங்கள் முதற்கொண்டு இங்கேயே தயாரிக்குறாங்க. மொத்தம் இருக்க 43 ஏக்கர்ல ஸ்ட்ராபெரி, டிராகன் பழவகைகள் அப்புறம் தக்காளி, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், பிரஞ்சு பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறி வகைகளும் பயிர் செய்யப்படுது.
ஆர்கானிக் முறையில வெளையுறதால மார்க்கெட்ல விக்கப்படுறத காட்டிலும் இதோட மதிப்பு பலமடங்கு அதிகம். இந்த காய்கறி, பழ வகைகள் எல்லாம் ஜார்கண்ட் மாநில அரசு உதவியோட வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுது. 50 பசுக்களை வளத்து அதோட பாலை ராஞ்சியில இருக்க சிறந்த ஸ்வீட் ஸ்டால்களுக்கு விற்பனை செய்றாரு. இவரோட பண்ணையில ஸ்பெஷல்ன்னு சொன்னா அது கடக்நாத் கோழிகள் தான்.
கருப்பு நிறத்துல இருக்க இந்த கோழிகளோட இறைச்சி மட்டுமின்றி முட்டையும் கருப்பு நிறத்துல தான் இருக்கும். ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கதால இந்த கோழியோட இறைச்சிக்கு மக்கள் மத்தியில நல்ல டிமாண்ட். அதனால தோனியோட பண்ணையில வளர்ற, இந்த கடக்நாத் கோழியோட 1 கிலோ இறைச்சி 1000 ரூபாய்க்கு விக்கப்படுதாம்.
இந்த பண்ணையில வீடு ஒண்ணும் தோனிக்கு இருக்கு. நீச்சல் குளம், ஜிம், கார்கள் நிறுத்துறதுக்கான கேரேஜ்ன்னு உள்ள ஏகப்பட்ட வசதிகள் இருக்கு. இதோட மொத்த மதிப்பு 100 கோடி.பண்ணையில இருந்து எவ்ளோ லாபம் வருதுன்னு தோனி வெளிப்படையா இதுவரைக்கும் சொல்லல. ஆனா எல்லாம் சேர்த்து மொத்தமா, 1 கோடி ரூபா வரைக்கும் லாபமா கிடைக்கலாம்னு கூறப்படுது.
விவசாயத்தை பொறுத்த வரைக்கும் நீண்டகால அடிப்படையில் தான் லாபம் பார்க்க முடியும். விவசாயத்துல தோனி இறங்கி சில வருஷங்கள் தான் ஆகுறதால இதுல இருந்து வருமானம் அதிகமா கெடைக்க இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். தோனியோட மொத்த சொத்த மதிப்பு 1040 கோடி. கிரிக்கெட், விளம்பரங்கள், பண்ணை வருமானம்னு அப்படின்னு எல்லாம் சேத்து, வருஷத்துக்கு 50 கோடி ரூபாய வருமானமா தோனி ஈட்டுறாரு.