தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஈடுபட்ட 4,470 பேர் மீது போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது. 2024ம் ஆண்டில் 6,920 ஆக உயர்ந்தது. சமீப நாட்களாக பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் அதிகம் வருவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.
பாலியல் குற்றவாளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.