Thursday, December 25, 2025

“எத்தனை தேர்தல்கள் வந்தாலும் பாஜக தான் ஆட்சியில் அமரும்” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழக பாஜக சார்பில் சென்னையில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க. கட்சிதான் ஆட்சியில் அமரும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. அதனை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி. அதன் காரணமாக பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Related News

Latest News