ஜூன் மாதத்தில் வங்கிகள் பல நாட்களில் அடைக்கப்பட்டன. இந்த விடுமுறைகள் பண்டிகைகள், இரண்டாம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த நாட்களில் வங்கிகளில் நேரடி சேவைகள் கிடைக்காது. எனவே, வாடிக்கையாளர்கள் நீங்கள் உங்களது வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.
சரி,தற்போது வாங்கி விடுமுறை நாட்களை பார்க்கலாம்..
ஜூன் 6, 2025 வெள்ளிக்கிழமை- பகரீத் (Eid ul Adha) – திருவனந்தபுரம் மற்றும் கோச்சி பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்..
ஜூன் 7, 2025 சனிக்கிழமை, பகரீத் (Eid ul Zuha) – இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கி விடுமுறை. அதாவது அகர்தலா, ஐஸ்வால், பெலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், குவஹாத்தி, ஹைதராபாத் – ஆந்திரா, ஹைதராபாத் – தெலுங்கானா, இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் பக்ரித் அன்று விடுமுறை இருக்கும்.
ஜூன் 10, 2025 – ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் வீரவணக்க நாள் – பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் வங்கி விடுமுறை.
ஜூன் 11, 2025, சந்த் கபீர் ஜெயந்தி – காங்க்டோக் மற்றும் ஷிம்லா பகுதிகளில் வங்கிகள் விடுமுறை அடைக்கப்பட்டிருக்கும்
ஜூன் 27,2025 புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் ரதயாத்திரை அன்று வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்.ஜூன் 30,2025 அன்று, ரெம்னா நியை முன்னிட்டு மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் வங்கிகள் விடுமுறை.
இது தவிர, ஜூன் 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாட்கள் இருக்கும்.அது மட்டுமின்றி, 5 ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதால், 5 ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்..எனவே, மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் செயல்படாது.
சரி , இப்படி வங்கி அடைக்கப்பட்டால் எப்படி வங்கி பணிகளை முடிப்பது என்று கேக்குறீங்களா??
அதாவது வங்கிகள் அடைக்கப்பட்ட நாட்களிலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவைகள் மூலம் தங்களது பணிகளை முடிக்கலாம். இதில் UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற சேவைகள் அடங்கும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையான பணிகளை வங்கிகள் திறந்திருக்கும் நாட்களில் முடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.