சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வளர்ச்சியில் BCCI முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு, பயிற்சி, போட்டி அட்டவணை, நிதி மற்றும் நிர்வாகம் அனைத்தும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.9,741.7 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதில், ஐபிஎல் தொடரே முக்கிய இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளால் மட்டும் ரூ.5,761 கோடி வந்துள்ளதாகவும், சர்வதேச தொடர்களின் ஒளிபரப்பு உரிமைகளால் ரூ.361 கோடி திறம்பட ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், பிசிசிஐக்கு சுமார் ரூ.30,000 கோடி வைப்பு நிதியாக உள்ளது; இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு வட்டி வருமானம் கிடைக்கிறது. இது எதிர்காலத்தில் 10-12% வரை அதிகரிக்கக்கூடும் என வணிகவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.