Tuesday, April 29, 2025

எவ்வளவு நாள் த.வெ.க தலைவர் விஜய்யை பற்றி இது தெரியாம போச்சே..?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர் விஜய்.. இவர் சம்பளம் எவ்வளவு அதிகமோ அதைவிட அவரது உலகளாவிய ரசிகர்களும் அதிகம் என்பது நிதர்சனமான உண்மை. இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படமே இவரது கடைசி படம் என விஜய் அறிவித்து விட்டார்.. அதன் பிறகு முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.. ஆகையால் ஜன நாயகன் திரைப் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்…

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. விஜய்யின் யாருக்கும் தெரியாத ஒரு பக்கம் இருக்கிறது.. அதாவது அவர் நடிப்பையும் தாண்டி விஜய் பாடல்களிலும் கலக்கி வருவது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் இந்த பாடல் எல்லாம் விஜய் பண்ணுதா என்ற அளவிற்கும் இருக்கும் பாடல்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய் முன்பே குழந்தை நட்சத்திரமாக 6 படங்களில் நடித்திருக்கிறார்..என்னதான் முன்பே படங்களில் நடித்துவிட்டாலும் பாடுவதற்கு கூச்சம் காட்டிய விஜயை வற்புறுத்தி முதல் முதலில் பட வைத்தது இசையமைப்பாளர் தேவா தான்.. அதாவது 1994 லில் வெளியான ரசிகன் படத்தில் “பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி” என்ற பாடலை பாடினார்.. அது மட்டுமின்றி முதல் பாடலிலேயே “சின்னக்குயில்” சித்ராவுடன் பாடினார்.

இதனைத்தொடர்ந்து வெளியான விஷ்ணு படத்தில் தனது அம்மா ஷோபா சந்திரசேகர்- யுடன் பாடிய “தொட்டபெட்டா ரோட்டு மேல” பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.. 1996 லில் இவரது நடிப்பில் 3 திரைப்படங்கள் வெளியான அதில் இந்த 3 திரைப்படங்களிலும் ஒரு ஒரு பாடல் பாடியுள்ளார் விஜய்..அந்த நாட்களிலேயே இந்த படங்கள் ஹிட் அடித்தன.. இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு 1997 லில் 3 திரைப்படங்கள் நடித்தார்.. அதில் மீண்டும் அம்மா ஷோபா சந்திரசேகர்வுடன் இணைந்து Once More படத்தில் “ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா” என்ற பாடலை பாடினார்..இளையராஜா இசையில் படுவது எளிதல்ல.. அப்படி ஒரு அறிய வாய்ப்பு நடிகர்களில் கமல்ஹாசனுக்கு பிறகு விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.. அந்த வகையில் காதலுக்கு மரியாதை படத்தில் “ஓ பேபி பேபி” பாடலை படி அசத்தியுள்ளார்..இது வரைக்கும் குத்து பாடல்களை பாடிய விஜய்க்கு இந்த பாடல் வேறு புதிய திருப்பு முனையாக இருந்தது.

சிறப்பாக குறிப்பிடக்கூடிய பாடல்கள்:

“தொட்டபெட்டா ரோட்டு மேல” – விஷ்ணு

“ஊர்மிளா கண்ணிலே காதலா” – Once More

“ஓ பேபி பேபி” – காதலுக்கு மரியாதை

“மௌரியா மௌரியா” – பிரியமுடன்

“மிசிசிப்பி நதி குலுங்க” – பிரியமானவளே

“உள்ளத்தை கில்லாதே” – தமிழன்

“Coca Cola Brownu Color Da” – பகவதி

“வாடி வாடி கைப்படாத சீடி” – சச்சீன்

“கூகுள் கூகுள்” –துப்பாக்கி

“செல்ஃபி புள்ள” – கத்தி, அது மட்டுமின்றி Bad Eyes என்ற Villain Theme என்ற background musicகில் ஜாதியை விஜய் பாடினார்

“யாண்டி யாண்டி” – புலி

“பட்டைய கெளப்பு ” – பைரவா

“வாரிசு”, “லியோ”, “தி கோட்” போன்ற சமீபத்திய படங்களிலும் பாடலை படி அசத்தியுள்ளார்

அடுத்த ஆண்டு வெளிய இருக்கும் ஜன நாயகன் திரைப்படத்திலும் விஜய் படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் முறைப்படி பாடலை கற்றுக்கொண்டவர்..
விஜய்யின் தாத்தா,பாட்டி மற்றும் விஜய்யின் தாய்மாமா வான SN சுரேந்தர் ஆகியோர் முறைப்படி பாடலை கற்றுக்கொண்டவர்கள்..
ஆனால் விஜய் இப்படி எந்த இசை பயிற்சியும் இல்லாமலேயே இசை துறையை அதிரவிடும் அளவிற்கு பல முன்னணி பாடகர்களோடு இணைந்து பாடியிருப்பது ஆச்சரியமே

Latest news