Thursday, December 26, 2024

மதியம் எவ்வளவு நேரம் தூங்கலாம்? நீண்ட நேரம் தூங்கினால் வரும் பாதிப்புகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்…..

காலை அல்லது மதிய நேரம் உணவிற்குப் பிறகு சிறிய மயக்கத்துடன் கூடிய தூக்கம் நமக்கு வரும், அப்போது ஒரு 5 நிமிடம் தூங்கலாம் என்று தோன்றும்,

ஆனால் தூங்க முடியாத சூழ்நிலையில் நாம் அலுவலகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டோ அல்லது கல்லூரியிலோ இருப்போம்,
எனவே அப்படி தூங்காமல் இருப்பதால் நாள் முழுவதும் ஏதோ எரிச்சல் இருப்பது போல் உணர்வோம், இதைத் தான் ஆய்வும் கூறுகிறது. மதிய நேரத்தில் நாம் சிறிது நேரம் தூங்குவது நம்முடைய மனதை நிம்மதியாக்குவதோடு, இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தியையும் அதிகரிக்க உதவுவதாக சொல்லப்பட்டுள்ளது.


நாம் அலுவலகத்தில் இருந்தாலோ அல்லது வேலைகள் செய்தாலோ, மத்தியம் நேரம் தூங்குவது அவசியம் என்று ஸ்பேயினில் உள்ள குவாடலஜாரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது,


மதியம் தூங்குவதால் தனிநபர்களின் வளர்ச்சிதையில் மாற்றம் ஏற்பட்டு ஆரோக்கியம் அதிகரிக்கும், அதுமட்டும் இல்லாமல் வேலை செய்யும் போது மூளை சோர்வாக இருக்கும் நேரத்தில், 10 முதல் 15 நிமிட நேப் தூக்கம் கிடைத்தால், மூளை புத்துணர்ச்சி அடையும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் வேகமாக வேலை செய்யலாம்.


ஆனால் மதியத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. எனவே மதிய வேளை தூக்கம் உடலுக்கு கேடு என்று சொல்வதை நிறுத்திவிட்டு, குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு தூங்கினால் நிச்சயம் உடலை ஆரோக்கியமாகவும், மனதைப் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Latest news